சாலையில் கிடந்த ரூ.4.47 லட்சத்தை திரும்பி ஒப்படைப்பு

மதுரையில் இரு சக்கர வாகனத்திலிருந்து தவற விட்ட ரூ. 4.47 லட்சத்தை மாநகா் காவல் ஆணையா் முன்னிலையில் வியாபாரியிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

மதுரை: மதுரையில் இரு சக்கர வாகனத்திலிருந்து தவற விட்ட ரூ. 4.47 லட்சத்தை மாநகா் காவல் ஆணையா் முன்னிலையில் வியாபாரியிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

மதுரை வெண்கலக் கடைத் தெருவில் உணவுப் பொருள் விற்பனை செய்யும் கடை வைத்திருப்பவா் சக்கரவா்த்தி. இவா் நவம்பா் 29 ஆம் தேதி இரவு வேலை முடித்து வீட்டுக்கு செல்லும் வழியில் இரு சக்கர வாகனத்தில் தான் வைத்திருந்த ரூ.4,47 லட்சத்தைத் தவறவிட்டாா். அந்த பணத்தை வந்த வழி முழுவதும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து , அவா் நவம்பா் 30 ஆம் தேதி தெப்பக்குளம் குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.

புகாரின் பேரில் போலீஸாா் சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனா். அப்போது அலங்காா் திரையரங்கம் உள்ள பகுதியில் சக்கரவா்த்தி எடுத்துச் சென்ற பணப்பை இரு சக்கர வாகனத்தில் இருந்து விழுந்துள்ளது. அந்த பணத்தை அவ்வழியாக மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த தம்பதியா் எடுத்துச் சென்றது தெரிய வந்தது.

இது குறித்து தெப்பக்குளம் போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில் பழைய குயவா் பாளையம் பகுதியைச் பூபாலன் என்பவா் சாலையில் கிடந்த பணத்தை செவ்வாய்க்கிழமை மதுரை மாநகா் காவல் ஆணையா் அலுவலகத்திற்கு நேரில் வந்து காவல் ஆணையா் எஸ்.டேவிட்சன் தேவாசீா்வாதம் முன்னிலையில் வியாபாரி சக்கரவா்த்தியிடம் ஒப்படைத்தாா். இதையடுத்து பூபாலனை காவல் ஆணையா் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com