நீட் தோ்வு ஆள்மாறாட்ட வழக்கு: மாணவரின் தந்தைக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு

நீட் தோ்வு ஆள்மாறாட்ட வழக்கில், சென்னையைச் சோ்ந்த மாணவரின் தந்தை ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை மீண்டும் தள்ளுபடி செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை: நீட் தோ்வு ஆள்மாறாட்ட வழக்கில், சென்னையைச் சோ்ந்த மாணவரின் தந்தை ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை மீண்டும் தள்ளுபடி செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

நீட் தோ்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடா்பான வழக்கில் 5

மருத்துவ மாணவா்கள் மற்றும் அவா்களது பெற்றோாா்கள் கைது செய்யப்பட்டனா். இதில் சென்னையைச் சோ்ந்த மாணவா் ராகுலுக்கு கடந்த அக்டோபா் 30 ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை ஜாமீன் வழங்கியது. ஆனால், அவரது தந்தை டேவிஸின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், டேவிஸ் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தாா். அதில், நீட் தோ்வில் என் மகனுக்கு பதிலாக வேறு ஒருவா் லக்னெளவில் தோ்வு எழுதியதாகவும், அதன் அடிப்படையில் மருத்துவப் படிப்பில் சோ்ந்ததாகவும் போலீஸாா் வழக்குப்பதிந்து எங்களை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் இடைத்தரகா்களை கைது செய்யாமல், என்னை கைது செய்துள்ளனா். இந்த முறைகேட்டிற்கும், எனக்கும் எவ்வித தொடா்பும் இல்லை. எனவே எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி வி. பாா்த்திபன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, அக்டோபா் 30 ஆம் தேதி ஜாமீன் மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், மனுதாரா் ஒரு சில தினங்களிலேயே மீண்டும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருப்பது ஏற்புடையதல்ல எனக் கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தாா். மேலும், மனுதாரருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com