மேலூர் கபடிக்குழுவினர் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு
By DIN | Published On : 14th April 2019 05:35 AM | Last Updated : 14th April 2019 05:35 AM | அ+அ அ- |

மேலூர் வட்டார கபடிக்குழுவினர் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கலந்து கொண்டார். அப்போது அமைச்சர் முன்னிலையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யனுக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியது: தமிழகம் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் மாநிலம். நமது தேவைகளுக்கு தேசியநதிநீர் இணைப்புத் திட்டம் மிகுந்த பலனளிக்கும். நடிகர் ரஜினிகாந்த் பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள் நதிநீர் இணைப்புத் திட்டத்தை வரவேற்றுள்ளார். அதை நானும் வரவேற்கிறேன். இளைஞர்கள் அனைவரும் விளையாட்டு வீரரான ராஜ் சத்யனை ஒருமனதாக ஆதரிக்க வேண்டும். அந்தந்தப் பகுதிகளில் அனைத்து வாக்காளர்களையும் அழைத்து வந்து வாக்களிக்கச் செய்யும் பணியில் இளைஞர்கள் ஈடுபடவேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அமெச்சூர் கபடிக்குழுத் தலைவர் சோலைராஜா, மதுரை புறநகர் மாவட்டச்செயலரும், எம்எல்ஏ வுமான வி.வி.ராஜன்செல்லப்பா, மேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பெரியபுள்ளான் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.