ஹார்விபட்டி, எஸ்.ஆர்.வி நகரில் தெருவிளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விபட்டி, எஸ்.ஆர்.வி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெருவிளக்குகள் எரியாததால் இப்பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.

திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விபட்டி, எஸ்.ஆர்.வி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெருவிளக்குகள் எரியாததால் இப்பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.
 மதுரை மாநகராட்சி 96 ஆவது வார்டுக்குள்பட்ட எஸ்.ஆர்.வி.நகர், அமைதிசோலை நகர் உள்ளிட்ட பகுதிகளும், 97 ஆவது வார்டுக்குள்பட்ட ஹார்விபட்டி பகுதியிலும் 90 சதவீத தெருவிளக்குகள் எரிவதில்லை. 10 ஆயிரத்திற்கு அதிகமானோர் வசிக்கும் இப்பகுதியில் பெரும்பாலானோர் மதுரை, திருமங்கலம், கப்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிகின்றனர். 
பணிமுடிந்து இரவு நேரத்தில் இப்பகுதியில் நடந்து மற்றும் வாகனத்தில் செல்வோர் பலர் இருளில் விபத்துக்குள்ளாகின்றனர். நாய்த் தொல்லையும் உள்ளது. மேலும் விஸ்தரிப்பு பகுதிகளான இங்கு குப்பைகளும் சரிவர அள்ளுவதில்லை . இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தாலும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதான தெருவிளக்குகளை சரிசெய்து தரவேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை விடுக்கின்றனர். 
இதுகுறித்து ஹார்விபட்டியைச்  சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி  கூறியது: ஹார்விபட்டி பேரூராட்சியாக இருந்த போது சிறப்பாக மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தும் தடையின்றி கிடைத்தது. மாநகராட்சி ஆனவுடன் தெருவிளக்கு இல்லை. குப்பைகள் அள்ளப்படுவதில்லை.  
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் எங்களது துறை இல்லை என தட்டிக்கழிக்கின்றனர். யாரிடம் புகார் தெரிவிப்பது என்றே எங்களுக்கு தெரியவில்லை.
 மாநகராட்சி அலுவலகத்திலேயே அந்தந்த துறை சார்ந்தவர்களின் செல்லிடப்பேசி எண்களை எழுதி வைத்தால் நாங்கள் புகார் செய்ய வசதியாக இருக்கும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com