மதுரை மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீஸார்

தமிழகத்தில் தீவிரவாதிகள் 6 பேர் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து,

தமிழகத்தில் தீவிரவாதிகள் 6 பேர் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து, மதுரை மாவட்டம் மற்றும் மாநகரில் 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
 தமிழகத்திற்குள் 6 தீவிரவாதிகள் இலங்கை வழியாக ஊடுருவியிருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து தமிழக டிஜிபி கே.திரிபாதி உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதும்  தீவிரச் சோதனை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை போலீஸார் வியாழக்கிழமை இரவு முதல் நடத்தி வருகின்றனர்.
 மதுரை மாநகர் காவல் ஆணையர் எஸ். டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின் பேரில் 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் வியாழக்கிழமை இரவு தொடங்கி அனைத்து பகுதிகளிலும் சோதனை செய்து வருகின்றனர். 
மாநகரில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கியிருக்கும் வெளி மாவட்டம், வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் விவரம் சேகரிப்பது, மதுரை நகருக்குள் வரும் வாகனங்கள் அனைத்தையும் சோதனையிடுவது, முக்கிய குற்றவாளிகளைக் கண்காணிப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் 4 நுழைவாயில்களிலும் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மோப்ப நாய்கள் கொண்டு சித்திரை வீதிகளில் போலீஸார் சோதனைகளை நடத்தி வருகின்றனர். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் என நகரின் முக்கியப் பகுதிகளில் போலீஸாரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
 இதே, போல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ. மணிவண்ணன் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் 1000-த்துக்கு மேற்பட்ட போலீஸார் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆலயங்கள் இருக்கும் பகுதி, மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு  பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  
  மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, மத்திய பாதுகாப்பு படையினர் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. 
மதுரை மாவட்டத்திற்குள் வரும் வானகங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன. சந்தேகத்திற்கு இடமளிக்கும் நபரிகளிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.
மதுரை விமான நிலையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு: மதுரை விமான நிலையத்தில் ஏற்கெனவே 5 அடுக்கு பாதுகாப்பு உள்ள நிலையில் வெள்ளிக்கிழமை முதல் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 
 மதுரை விமான நிலையத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகின்ற 28 ஆம் தேதி வரை 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் 28 ஆம் தேதி வரை விமான நிலையத்திற்குள் பார்வையாளர்களுக்கும் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. 
இந்நிலையில் கோவை மாநகருக்குள் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக காவல்துறைக்கு வந்த தகவலை அடுத்து தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 
அதன் எதிரொலியாக மதுரை விமான நிலையத்தில் ஏற்கெனவே 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை முதல் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அதிவிரைவு படையினர் எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com