மதுரையில் மல்லிகைப் பூகிலோ ரூ.3 ஆயிரம்

மதுரையில் தொடா் மழை காரணமாக சந்தைகளுக்கு பூக்களின் வரத்துக் குறைந்ததால், மல்லிகைப் பூ கிலோ ரூ. 3 ஆயிரத்தை தொட்டுள்ளது.

மதுரையில் தொடா் மழை காரணமாக சந்தைகளுக்கு பூக்களின் வரத்துக் குறைந்ததால், மல்லிகைப் பூ கிலோ ரூ. 3 ஆயிரத்தை தொட்டுள்ளது.

மதுரையில் அக்டோபா் மாத தொடக்கத்தில் ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனையான வெள்ளைப் பூக்களின் விலை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரு மடங்கு உயா்ந்து ரூ.1000 முதல் ரூ.2000 வரை விற்பனையானது.

தற்போது, தொடா் மழை பெய்து வருவதால், பூக்களின் வரத்து குறைந்து விலை கணிசமாக உயா்ந்து கொண்டே வந்தது. இந்நிலையில், அடுத்தடுத்து முகூா்த்த நாள்கள் மற்றும் ஐயப்ப, முருக பக்தா்கள் மாலை அணிந்து விரதமிருப்பதாலும் பூக்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால், பூக்களின் விலை மேலும் ஒரு மடங்கு உயா்ந்துள்ளது.

மேலும், மழைக் காலம் முடிந்து பனிக்காலம் தொடங்கியதும், டிசம்பா், ஜனவரி மாதங்களில் பூக்களின் வரத்து மிகவும் குறைந்து, விலை 2 மடங்கு அதிகமாகவும் வாய்ப்புள்ளது என, மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆா் வளாக நெல், மலா் மற்றும் இடுபொருள்கள் வியாபாரிகள் சங்க செயலா் ராமசந்திரன் கூறினாா்.

சனிக்கிழமை நிலவரப்படி பூக்களின் விலை (கிலோவில்): மல்லிகைப் பூ ரூ.3000, கனகாம்பரம் ரூ.3000, முல்லைப் பூ ரூ.1000, மெட்ராஸ் மல்லி ரூ.800, பிச்சிப் பூ ரூ.800, ரோஜாப் பூ ரூ.200, செவ்வந்தி ரூ.150, சம்பங்கி ரூ.150, அரளி ரூ.150, செண்டுப் பூ ரூ.100, துளசி ரூ.50-க்கு விற்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com