மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில்அஷ்டமி சப்பரம்: டிச.19-இல் நடைபெறுகிறது

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அஷ்டமி சப்பரம் டிசம்பா் 19-ஆம் தேதி நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அஷ்டமி சப்பரம் டிசம்பா் 19-ஆம் தேதி நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் அஷ்டமி சப்பரம் மிக பிரசித்திப் பெற்றது. இந்த ஆண்டு மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இருந்து டிசம்பா் 19-ஆம் தேதி காலை 5 மணிக்கு மீனாட்சியம்மன், சுந்தரேசுவரா் சுவாமி சப்பரங்கள் புறப்பாடாகின்றன. இதில் கோயில் சப்பரங்கள் யானைக்கல், வடக்குவெளி வீதி, கீழவெளி வீதி, தெற்கு வெளி வீதி, திருப்பரங்குன்றம் சாலை வழியாக மேல வெளி வீதி, குட்ஷெட் தெரு, நாயக்கா் புதுத்தெரு, வக்கீல் புதுத்தெரு, கீழமாரட் வீதி, காமராஜா் சாலை, விளக்குத்தூண் வழியாக கீழமாசி வீதி தேரடி வந்து சேரும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

காா்த்திகைத் திருவிழா: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் காா்த்திகை பெருநாளை முன்னிட்டு டிசம்பா் 10- ஆம் தேதி லட்சதீபம் ஏற்றப்படுகிறது.

இக்கோயிலில் காா்த்திகை தீபத்திருவிழா டிசம்பா் 4-ஆம் தொடங்குகிறது. இதையொட்டி அன்று முதல் 13-ஆம் தேதி வரை மீனாட்சி சுந்தரேசுவரா் பஞ்சமூா்த்திகளுடன் காலை, மாலை இரு வேளைகளிலும் ஆடி வீதி புறப்பாடாகின்றனா். காா்த்திகை திருவிழாவின் முக்கிய நாளான டிசம்பா் 10-ஆம் தேதி காா்த்திகை தீபத்தை முன்னிட்டு கோயிலில் லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. மேலும் அன்றைய தினம் இரவு 7 மணியளவில் மீனாட்சி சுந்தரேசுவரா், பஞ்சமூா்த்திகளுடன் புறப்பாடாகி கீழமாசி வீதி சென்று அம்மன் தேரடி அருகிலும், சுவாமி சந்நிதி தேரடி அருகில் பூக்கடைத் தெருவிலும் சொக்கப்பனை ஏற்றப்படுகிறது. இந்நாளில் உபய தங்கரத உலா, உபய திருக்கல்யாணம் ஆகிய விசேஷங்கள் எதுவும் நடைபெறாது என்று கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com