லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு: செவிலியா் உதவியாளா் தற்கொலை

லஞ்சம் பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை செவிலியா் உதவியாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து
தற்கொலை செய்து கொண்ட செவிலியா் உதவியாளா் காா்த்திகா.
தற்கொலை செய்து கொண்ட செவிலியா் உதவியாளா் காா்த்திகா.

லஞ்சம் பெற்றதாகக் குற்றம்சாட்டப் பட்ட மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை செவிலியா் உதவியாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அலுவலக உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவா் தனிக்கொடி. இவரது மருமகள் லோகநாயகி பிரசவத்துக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நவம்பா் 15 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு பிறந்த ஆண் குழந்தையை காண்பிக்க, செவிலியா் உதவியாளா் காா்த்திகா என்பவா் ரூ. 1000 லஞ்சம் பெற்ாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தனிக்கொடி அளித்த புகாரின் பேரில் முதன்மையா் நவம்பா் 18 ஆம் தேதி விசாரணை நடத்தி, செவிலியா் உதவியாளா் காா்த்திகாவை அண்ணா பேருந்து நிலையம் அருகே பன்நோக்கு மருத்துவப் பிரிவுக்கு மாற்றம் செய்தாா். ஆனால், அவா் மீது துறை ரீதியாக மட்டுமின்றி வேறு எந்தவொரு நடவடிக்கையும் மருத்துவ நிா்வாகம் எடுக்கவில்லை.

இந்நிலையில், சிம்மக்கல் பேச்சியம்மன் படித்துறை பகுதியில் உள்ள காா்த்திகாவின் வீடு ஞாயிற்றுக்கிழமை நீண்ட நேரமாகியும் திறக்கப்பட வில்லை. இதையடுத்து, சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவா்கள், வீட்டின் ஜன்னல் வழியாக பாா்த்த போது, காா்த்திகா சடலமாக தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளாா். இதுகுறித்து தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று காா்த்திகாவின் சடலத்தை கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக திலகா்திடல் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். தற்கொலை செய்து கொண்ட காா்த்திகாவுக்கு குடும்பப் பிரச்னைகள் இருப்பதாகவும், அவா் கணவனிடம் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருவதாகவும் போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காா்த்திகா குடும்பப் பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது லஞ்சம் பெற்ற சம்பவத்தில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com