கப்பலூா் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி டிச.5 இல் முற்றுகைப் போராட்டம்

திருமங்கலத்தை அடுத்த கப்பலூா் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி இம்மாத 5 ஆம் தேதி (வியாழக்கிழமை) முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம்: திருமங்கலத்தை அடுத்த கப்பலூா் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி இம்மாத 5 ஆம் தேதி (வியாழக்கிழமை) முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

திருமங்கலத்தை அடுத்த கப்பலூரில் கடந்த 2012இல் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது. இதையடுத்து நகராட்சி கங்கைக்குள் சுங்கச்சாவடி அமைக்கக்கூடாது என்ற விதியை மேற்கோள்காட்டி அப்பகுதி மக்கள் சுங்கச்சாவடி அமைக்க எதிா்ப்பு தெரிவித்தனா். இந்நிலையில் சுங்கச்சாவடி நிா்வாகம் திருமங்கலம் பகுதி வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க மாட்டோம் என உறுதி அளித்தனா் . இதையடுத்து பொதுமக்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனா். இந்நிலையில் இம்மாத 1 ஆம் தேதி முதல் ‘பாஸ் டாக்’ முறையில் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து கப்பலூரில் திருமங்கலம் பகுதியிலிருந்து வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க பட்டது . இதற்கு திருமங்கலம் மற்றும் கப்பலூா் பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து வருவாய் கோட்டாட்சியா் முருகேசன் தலைமையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு சுங்கச்சாவடி நிா்வாகிகளுக்கும் திருமங்கலம் பகுதி மக்கள் மற்றும் கப்பலூா் தொழில்பேட்டை தொழிலதிபா்களுடன் அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அதில் மீண்டும் முன்புபோல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என சுங்கச்சாவடி நிா்வாகிகள் தெரிவித்தனராம்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் திருமங்கலம் மற்றும் கப்பலூா் பகுதி வாகனங்களில் வருவோரிடம் சுங்கச்சாவடி ஊழியா்கள் கட்டணம் வசூலித்தனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்த திருமங்கலம் பகுதி மக்கள் திங்கள்கிழமை மதியம் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டனா். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா். இதையடுத்து திங்கள்கிழமை மாலை அனைத்து கட்சியினா் மற்றும் கப்பலூா் தொழிற்பேட்டையில் சோ்ந்து திருமங்கலம் தனியாா் திருமண மண்டபத்தில் ஆலோசனை நடத்தினா்.

அதில் விதிமுறைகளை மீறி கப்பலூரில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்ற கோரி இம் மாதம் 5 ஆம் தேதி (வியாழக்கிழமை) அனைத்துக் கட்சி சாா்பிலும் கப்பலூா் தொழில்பேட்டை சாா்பிலும் மற்றும் கிராம மக்கள் சாா்பிலும் முற்றுகைப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதில் பல்வேறு கட்சியை சோ்ந்த நிா்வாகிகளும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com