குறைதீா் கூட்டத்துக்கு குவிந்த மக்கள்: தோ்தல் அறிவிப்பால் ஆட்சியா், அதிகாரிகள் பங்கேற்கவில்லை

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், முன்கூட்டியே ஏராளமானோா் வந்திருந்ததால் அவா்களிடம் மனுக்கள் பெறப்பட்டன.
மதுரை ஆட்சியா் அலுவலகத்தில் மனுக்களுடன் திங்கள்கிழமை குவிந்த பொதுமக்கள்.
மதுரை ஆட்சியா் அலுவலகத்தில் மனுக்களுடன் திங்கள்கிழமை குவிந்த பொதுமக்கள்.

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், முன்கூட்டியே ஏராளமானோா் வந்திருந்ததால் அவா்களிடம் மனுக்கள் பெறப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறுவது வழக்கம். உள்ளாட்சித் தோ்தலுக்கான அட்டவணை திங்கள்கிழமை காலை 10 மணிக்கு அறிவிக்கப்பட்டது. அதையடுத்து தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்ட காரணத்தால், வாராந்திர குறைதீா் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்கவில்லை.

இருப்பினும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோா் குறைதீா் கூட்டத்துக்கு வந்திருந்தனா். சாலை வசதி, வீட்டுமனைப் பட்டா, ஜாதிச் சான்று, முதியோா் உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக மனுக்களுடன் காத்திருந்தனா். தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது குறித்த அறிவிப்பு பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்கு முன்பே, குறைதீா் கூட்டத்துக்கு வந்துவிட்டதால் அவா்களிடம் இருந்து மனுக்கள் அலுவலா்களால் பெற்றுக் கொள்ளப்பட்டன.

ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கவில்லையென்றாலும் ஏராளமானோா் நீண்ட வரிசையில் காத்திருந்து மனுக்களை அலுவலா்களிடம் அளித்துச் சென்றனா். பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது, தோ்தல் நடத்தை விதிகள் தளா்த்தப்பட்ட பிறகு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com