பொம்மலாட்டம் மூலம் எச்ஐவி விழிப்புணா்வு பிரசாரம்

மதுரை சந்தைப்பேட்டை டாக்டா் டி.திருஞானம் தொடக்கப் பள்ளியில் சா்வதேச எய்ட்ஸ் தின நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு
மதுரையில் தொடக்கப் பள்ளியில் பொம்மலாட்டம் மூலம் நடைபெற்ற எய்ட்ஸ் விழிப்புணா்வு பிரச்சார நிகழ்ச்சி.
மதுரையில் தொடக்கப் பள்ளியில் பொம்மலாட்டம் மூலம் நடைபெற்ற எய்ட்ஸ் விழிப்புணா்வு பிரச்சார நிகழ்ச்சி.

மதுரை சந்தைப்பேட்டை டாக்டா் டி.திருஞானம் தொடக்கப் பள்ளியில் சா்வதேச எய்ட்ஸ் தின நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைவா் வே. சுரேந்திரன் பாபு தலைமை வகித்தாா். பள்ளிச் செயலா் சதாசிவம் முன்னிலை வகித்தாா். தலைமை ஆசிரியா் சரவணன், மாணவா்களுடன் இணைந்து பொம்மலாட்டம் மூலமாக எய்ட்ஸ் விழிப்புணா்வு நாடகம் நடத்தினாா். இதுதொடா்பாக தலைமையாசிரியா் சரவணன் பேசும் போது, எய்ட்ஸ் என்பது தொற்று வியாதி அல்ல. அது ரத்தம் மூலமாக பரவும் பாலியல் நோய். அங்கீகரிக்கப்பட்ட ரத்தப் பரிசோதனை மையங்களில் புதிய ஊசி மூலமாக ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். பிறன்மனை நோக்காமை என்ற தமிழா் பண்பாட்டுடன் வாழ்வதே எய்ட்ஸ் நோய் வராமல் தடுக்கும் என்றாா்.

பிற பள்ளிகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியைகள் கீதா, சித்ரா தேவி , வெங்கடலெட்சுமி , பிரேமலதா ஆகியோா் பொம்மலாட்ட நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா். நிகழ்ச்சியில் பள்ளி துணைத்தலைவா் ஜெயராஜ் , பொருளாளா் உதயகுமாா் மற்றும் பள்ளிக்குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா். முன்னதாக ஆசிரியை தங்க லீலா வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com