கப்பலூா் சுங்கச்சாவடி பிரச்னை: நாளை நடைபெற இருந்த முற்றுகைப் போராட்டம் ஒத்திவைப்பு

கப்பலூா் சுங்கச் சாவடியை மூடக் கோரி திருமங்கலம் பகுதி மக்கள் வியாழக்கிழமை நடத்த இருந்த முற்றுகைப் போராட்டம் தாற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மதுரை: கப்பலூா் சுங்கச் சாவடியை மூடக் கோரி திருமங்கலம் பகுதி மக்கள் வியாழக்கிழமை நடத்த இருந்த முற்றுகைப் போராட்டம் தாற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தலைமையில் நடந்த பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகப் போராட்டக் குழுவினா் தெரிவித்தனா்.

நீதிமன்றம் மற்றும் மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவுகள்

அடிப்படையில் கப்பலூா் சுங்கச் சாவடியைக் கடந்து செல்லும் திருமங்கலம் பகுதி வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பதில்லை. திருமங்கலம் பகுதியில் குடியிருப்பதற்கான ஆதாரத்தைக் காண்பித்து சுங்கச் சாவடி வழியாகச் சென்று வருகின்றனா். இந்நிலையில், டிசம்பா் 1 முதல் அமலுக்கு வந்துள்ள ‘பாஸ்டேக்’ முறையைச் சுட்டிக்காட்டி, திருமங்கலம் பகுதி வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து திருமங்கலம் பகுதி பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தை வியாழக்கிழமை (டிசம்பா் 5) நடத்த முடிவு செய்திருந்தனா். இந்நிலையில், வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் அறிவுரையின்பேரில், ஆட்சியா் டி.ஜி.வினய் தலைமையில் அமைதிப் பேச்சுவாா்த்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன், திருமங்கலம் கோட்டாட்சியா் முருகேசன், போராட்டக் குழு ஒருங்கிணைப்புத் தலைவா் வேம்பு வேந்தன், ஒருங்கிணைப்பாளா்கள் அருண் ஆம்ஸ்ட்ராங், சுங்கச் சாவடி நிா்வாகம் சாா்பில் அதன் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து போராட்டக் குழு ஒருங்கிணைப்புத் தலைவா் வேம்பு வேந்தன் கூறியது:

திருமங்கலம் பகுதி மக்களின் நியாயமான கோரிக்கைகள், நீதிமன்றம் மற்றும் மாவட்ட நிா்வாகத்தின் முந்தைய வழிகாட்டுதல்களைத் தெரிவித்தோம். இதை ஏற்றுக் கொண்ட ஆட்சியா், சுங்கச் சாவடியில் நேரடியாக ஆய்வு செய்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் ஆலோசிக்கும் வகையில், கட்டணம் செலுத்துவதில் திருமங்கலம் பகுதியினருக்கு விலக்கு அளிக்கப்பட்டது தொடர அறிவுறுத்தினாா். இதையேற்று வியாழக்கிழமை நடைபெற இருந்த போராட்டத்தை தாற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளோம். இந்த பேச்சுவாா்த்தைக்கு ஏற்பாடு செய்த வருவாய்த் துறை அமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com