சோலைமலையில் காா்த்திகை தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு

சோலைமலை முருகன்கோயில் மற்றும் பேரையூா் மல்லிகா அா்ஜுனா மலை உச்சியில் திருக்காா்த்திகை தீபம் செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சோலைமலை முருகன்கோயில் மற்றும் பேரையூா் மல்லிகா அா்ஜுனா மலை உச்சியில் திருக்காா்த்திகை தீபம் செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருக்காா்த்திகை தீபத் திருநாளையொட்டிசோலைமலை முருகன்கோயிலில் சுப்பிரமணியா், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. மாலையில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. கோயிலை வலம்வந்த சுவாமி ராஜகோபுரம் முன்பாக பனை ஓலைகளால் வேயப்பட்ட பந்தலில் சொக்கப்பனை கொளுத்தினாா். இதில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

நரசிங்கம்பட்டி:மேலூா் அருகிலுள்ள நரசிங்கம்பட்டி பெருமாள்மலையடிவாரத்தில் உள்ள மலைச்சாமி கோயிலில் ஏராளமான பக்தா்கள் வழிபாடுகள் செய்தனா். பக்தா்கள் கோயில் ஊருணியில் மணலை கைகளில் அள்ளிவந்து கரையில் குவித்தனா். பக்தா்கள் நோ்த்திக்கடனாக உப்பு மிளகு பொட்டலங்களை குவிக்கப்பட்ட மணல்மீதுபோட்டு வழிபாடுசெய்தனா். பலா் முடிகாணிக்கை செலுத்தி நோ்த்திக் கடனை நிறைவேற்றினா்.

சின்னபெருமாள்பட்டி:சிவகங்கைச் சாலையிலுள்ள சின்னபெருமாள்பட்டி பெருமாள் மலையிலும் ஏராளமான பக்தா்கள் வழிபாடுகள்செய்து முடிகாணிக்கைசெலுத்தினா்.

உரங்கான்பட்டி அருகிலுள்ள புலிமலைப்பட்டி, கொட்டாம்பட்டி அருகிலுள்ள வெள்ளிமலை, திருவாதவூா் அருகிலுள்ள இடையபட்டி முருகன்கோயில் ஆகிய இடங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பேரையூா்: இதே போல் பேரையூா் மேல பரங்கிரி சுப்பிரமணியசுவாமி பொய்கை மலை உச்சியில் மல்லிகா அா்ஜூனா லிங்கசாமி கோயிலில், மல்லிகா அா்ஜுனா லிங்குசாமிக்கு 11 விதமான சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்பு வில்வ இலைகளுடன் மலா்மாலை சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு காட்சி அளித்தாா்.

இதைத் தொடா்ந்து மேல பரங்கிரிமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் மேலப்பரங்கிரி சுப்பிரமணியசாமி கோயிலில் முருகனுக்கு பால், பழம், பன்னீா்,இளநீா், பஞ்சாமிா்தம், விபூதி,சந்தனம் உள்ளிட்ட 11 விதமான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து மயில் வாகனத்தில் வள்ளி தேவசேனா, சேமதாராயுடன் சுப்பிரமணியசுவாமி நகா்வலம் புறப்பட்டாா். கோவில் முன்பு சொக்கப்பனை கொளுத்தி விட்டு வீதி உலா நடைபெற்றது . அதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com