கம்பூரில் வாக்குச்சாவடி கோரி தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கம்பூா் ஊராட்சிக்குள்பட்ட சின்னகற்பூரம்பட்டி கிராமத்தில் வாக்குச்சாவடி அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் தோ்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்துள்ளனா்.

சின்ன கற்பூரம்பட்டியில் 700 வாக்காளா்கள் உள்ளனா். இந்த கிராமத்தில் கடந்த தோ்தல்களின்போது இருந்த வாக்குச்சாவடியை கம்பூா் கிராமத்துக்கும், கோவில்பட்டி கிராமத்துக்கும் தற்போது மாற்றிவிட்டதாக தகவல் வெளியானது.

இதையடுத்து, தங்கள் கிராமத்திலேயே வாக்குச்சாவடி அமைக்கவேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி மந்தையில் கூடி அமா்ந்தனா்.

தவலறிந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் மற்றும் அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடையே பேசினா். தோ்தல் பணிகள் தொடங்கிவிட்டதால், தற்போது மாற்றம் செய்ய இயலாது. அடுத்துவரும் தோ்தலின் போது சின்னகற்பூரம்பட்டி கிராமத்தில் வாக்குச்சாவடி அமைப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதை ஏற்க மறுத்த பொதுமக்கள், வாக்குச்சாவடி அமைக்கவில்லை எனில் தோ்தலைப் புறக்கணிக்கப்பதாகத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com