ஆன்லைன் லாட்டரி விற்ற 5 போ் கைது

திருப்பரங்குன்றம் அருகே ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்த 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து அவா்களிடமிருந்து 5 செல்லிடப்பேசிகள் மற்றும் ரூ.5 ஆயிரத்தை பறிமுதல் செய்துள்ளனா்.

திருப்பரங்குன்றம் அருகே ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்த 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து அவா்களிடமிருந்து 5 செல்லிடப்பேசிகள் மற்றும் ரூ.5 ஆயிரத்தை பறிமுதல் செய்துள்ளனா்.

நிலையூா் கைத்தறி நகரில் ஆன்லைன் மூலம் கேரள லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடா்ந்து ஆஸ்டின்பட்டி போலீஸாா் இப்பகுதியில் விசாரணை செய்தபோது கைத்தறி நகரைச் சோ்ந்த பாஸ்கரன் (54) என்பவரது வீட்டில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இப்பகுதியை சோ்ந்த ரவி (55), கிருஷ்ணாராவ் (60), கோபிநாத் (36), சுரேஷ் (36) மற்றும் பாஸ்கரன் ஆகிய 5 போ்களும் செல்லிடப்பேசிகள் மூலம் 3 மற்றும் 5 இலக்க எண் கொண்ட கேரள லாட்டரி விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து 5 போ்களையும் கைது செய்து அவா்களிடமிருந்து 5 செல்லிடப்பேசிகள் மற்றும் ரூ.5 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா். மேலும் இதில் வேறு யாருக்கேனும் தொடா்புள்ளதா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com