விமான நிலையத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு  குறித்த ஆலோசனைக் கூட்டம்

மதுரை விமான நிலையத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்  குறித்த  ஆலோசனை க்கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.   

மதுரை விமான நிலையத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்  குறித்த  ஆலோசனை க்கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.   
  விமானநிலைய வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமை வகித்தார். விமான நிலைய இயக்குனர் வி.வி.ராவ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள  பகுதிகளை சுகாதாரமாக வைத்திருப்பது, மேலும் விமான நிலையத்தை சுற்றியுள்ள கிராமங்களான பெருங்குடி, சின்னஉடைப்பு, பரம்புப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் குப்பைகளைத் தேடி பறவைகள் ஏதும்  வராதவண்ணம் சுத்தமாக பராமரிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
 மேலும் பெருங்குடியிலிருந்து விமான நிலையம் வரை தெருவிளக்குகள் பொருத்த வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து விமான நிலைய பாதுகாப்பு தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டோ எல்.மொகந்தி, திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com