"மக்கள் நலனை விரும்பும் கட்சிகளுடன் கூட்டணி'

மக்கள் நலனை விரும்பும் கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசி வருகிறோம் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை

மக்கள் நலனை விரும்பும் கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசி வருகிறோம் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.  
சென்னையிலிருந்து விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை மதுரை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: 
அதிமுக தலைமையில் தேசிய மற்றும் மாநில கட்சிகளுடனான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் எங்களது கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும். பாஜக, பாமக உடனான கூட்டணி பேச்சு வார்த்தை முடிவடைந்துள்ளது. மேலும் மக்கள் நலனை விரும்பும் கட்சிகளுடன் கூட்டணி பேச்சு நடந்து வருகிறது. 
இன்னும் ஓரிரு தினங்களில் கூட்டணி பேச்சு வார்த்தை முடிவடைந்து, யார் யாருக்கு எந்தெந்த தொகுதி என படிப்படியாக அறிவிக்கப்படும். தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது.
 தமிழகத்தில் 95 சதவீதம் மக்கள் எங்கள் பக்கம் உள்ளதால், 38 தொகுதிகளில் அமமுக வெற்றி பெறும் என  டி.டி.வி.தினகரன் பேசிவருகிறார். அந்த காலம் முதல் இன்று வரை அவர் சொல்வது எதுவும் நடைபெறவில்லை. இரு தினங்களுக்கு முன்பு கூட நாட்டின் பிரதமரையே தீர்மானிக்கக் கூடிய சக்தியாக அமமுக மாறும் என அவர் கூறியது மிகப் பெரிய வேடிக்கை. இதிலிருந்து அவருடைய அரசியல் புரிதலை அறிந்து கொள்ளலாம் என்றார். 
முன்னதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு விமான நிலையத்தில் தொண்டர்களுக்கு அவர் இனிப்பு வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com