திருப்பரங்குன்றம் பகுதி வாக்குச்சாவடி மையங்களில் அதிகாரிகள் ஆய்வு
By DIN | Published On : 28th February 2019 08:13 AM | Last Updated : 28th February 2019 08:13 AM | அ+அ அ- |

திருப்பரங்குன்றம் தாலுகா பகுதிகளுக்கு உள்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் வருவாய்த்துறையினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.
திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உள்பட்ட பகுதிகளில் 124 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இவற்றில், குடிநீர், கழிப்பறை, மின் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை உள்ளிட்ட வசதிகள் உள்ளனவா என்பது குறித்து வட்டாட்சியர் சுரேஷ் தலைமையில் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் மீனாட்சி சுந்தரம், வருவாய் ஆய்வாளர் தங்கபாண்டியன் உள்ளிட்ட அலுவலர்கள் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.