மாணவியின் ஆடைகளை கலைந்து சோதனை: பல்கலை. கல்லூரியில் சிண்டிகேட் குழு விசாரணை

மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் பணம் மாயமானது தொடர்பாக மாணவியின் ஆடைகளை

மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் பணம் மாயமானது தொடர்பாக மாணவியின் ஆடைகளை கலைந்து சோதனை நடத்தியதாக புகாரின் பேரில் சிண்டிகேட் குழுவினர் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் முதுநிலை பட்ட படிப்பு மேற்கொண்டுள்ள மாணவி ஒருவரிடம் இருந்த பணம் கடந்த மாதம் மாயமானது. கல்லூரி வகுப்பறையில் இருந்து பணம் மாயமானதால் அந்த பெண் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் கல்லூரி நிர்வாகம் ஒரு மாணவியை சந்தேகத்தின்பேரில் தனியாக அழைத்துச் சென்றுள்ளது. மேலும்  மற்றொரு மாணவியை வைத்து அந்த மாணவியின் ஆடைகளை கலைந்து சோதனை செய்யுமாறும் தெரிவித்துள்ளது. இதனால் மனமுடைந்த மாணவி பல்கலைக்கழக துணை வேந்தர் மு.கிருஷ்ணனை சந்தித்து தனக்கு இழைக்கப்பட்ட கொடுமை தொடர்பாக புகார் அளித்துள்ளார். இதையடுத்து மாணவி அளித்த புகாரை சிண்டிகேட் குழு விசாரிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில்  பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் மூவர்  காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனர். இதில் புகார் அளித்த மாணவியை தனியாக அழைத்து நடந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். மேலும் பணம் மாயமானதாக புகார் அளித்த மாணவியிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணை முடிவில் சோதனை என்ற பெயரில் நடந்த சம்பவங்களை எழுத்துப்பூர்வமாக சிண்டிகேட் குழுவினர் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சிண்டிகேட் உறுப்பினர்களிடம் கேட்டபோது, மாணவியின் புகார் தொடர்பாக கல்லூரிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை பல்கலைக்கழக துணைவேந்தரிடம் அளிக்கப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com