சந்திர கிரகணம்: அழகர்கோவிலில் ஜூலை 16-இல் நடை அடைப்பு

சந்திர கிரகணத்தையொட்டி கள்ளழகர்  கோயில் மற்றும் உபகோயில்களில் வரும் 16-ஆம் தேதி இரவு 7 மணிக்கு நடை அடைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திர கிரகணத்தையொட்டி கள்ளழகர்  கோயில் மற்றும் உபகோயில்களில் வரும் 16-ஆம் தேதி இரவு 7 மணிக்கு நடை அடைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூரண சந்திர கிரகணம் ஜூலை 16-இல் ஏற்படுவதையொட்டி கள்ளழகர் திருக்கோயில், அழகர் மலை ராக்காயி அம்மன் கோயில், உபகோயில்களான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், வண்டியூர் வீரராகவப்பெருமாள் கோயில் மற்றும் மேலூர் ஆஞ்சநேயர் கோயில்களில் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்குள் அனைத்து பூஜைகளும் நடத்தப்பட்டு நடை அடைக்கப்படும். பின்னர் மீண்டும் மறுநாள் காலை வழக்கம்போல  கோயில்களில் நடை திறக்கப்படும் என்று துணை ஆணையர் செ.மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com