மதுரையில் மக்கள் நீதிமன்றம்: 2,990 வழக்குகளுக்கு தீர்வு

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மற்றும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், 2,990 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.


சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மற்றும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், 2,990 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மற்றும் மாவட்டத்தில் உள்ள சட்டப் பணிகள் ஆணைக் குழு மூலம் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்),  முதன்மை மாவட்ட நீதிபதி ஏ. நஸிமா பானு, சமரசத் தீர்வு மையத் தலைவர் பி. மதுசூதனன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் டி.வி. ஹேமாநந்தகுமார், மாவட்ட சட்ட உதவி மையச் செயலர் எஸ். அசன் முகமது ஆகியோர் முன்னிலையில் வழக்குகள் விசாரிக்கப்பட்டன. 
இதில், சாலை விபத்துகளில் இழப்பீடு சம்பந்தப்பட்ட நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு வழக்குகள், மின்சாரப் பயன்பாடு, வீட்டு வரி, தண்ணீர் வரி, ஓய்வூதியம் சம்பந்தப்பட்ட மனுக்கள், காசோலை மோசடி, மணவிலக்கு தவிர்த்த குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம், நில ஆர்ஜித வழக்குகள், தொழிலாளர் நலன், இழப்பீடு உள்ளிட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டன. 
மக்கள் நீதிமன்றங்களில் இழப்பீட்டுத் தொகை மற்றும் பிற பிரச்னைகளுக்கு மனுதாரர், எதிர்மனுதாரருடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி, வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டன. 
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வங்கி தொடர்பாக விசாரிக்கப்பட்ட 4,454 வழக்குகளில் 409 வழக்குகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டன. இதில், வராக் கடனான 4 கோடியே 51 லட்சத்து 29 ஆயிரத்து 565 ரூபாயை வங்கிகளுக்கு பெற்றுத் தரப்பட்டன.
அதேநேரம், நிலுவையில் இருந்த 8,643 வழக்குகளில் 2,509 வழக்குகளுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டன. அதில், 26 கோடியே 97 லட்சத்து 58 ஆயிரத்து 723 ரூபாய் மனுதாரர்களுக்கு இழப்பீடுத் தொகையாக பெற்றுத் தரப்பட்டன.
இதேபோல், சென்னை உயர் நீதிமன்ற மக்கள் நீதிமன்றத்தில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் 
ஆர். மகாதேவன், டி. கிருஷ்ணவள்ளி, பி. ராஜமாணிக்கம், ஆர்.பொங்கியப்பன், ஓய்வுபெற்ற 6 மாவட்ட நீதிபதி கொண்ட அமர்வு முன்னிலையில் வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதில், 860 வழக்குகளில்  72 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, 6 கோடியே 97 லட்சத்து 52 ஆயிரத்து 46 ரூபாய் மனுதாரர்களுக்கு இழப்பீடு தொகையாகப் பெற்றுத் தரப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com