குழந்தைகள் புற்றுநோய் விழிப்புணர்வு: ஒரு மாத பிரசார பயணம் நிறைவு

குழந்தைகள் புற்றுநோய் குறித்து  மதுரையில் தொடங்கிய விழிப்புணர்வு பிரசார  வாகனப் பயணம் நாடு முழுவதும் 30 நகரங்கள் வழியாகச் சென்று மீண்டும்  மதுரை வந்தடைந்தது.


குழந்தைகள் புற்றுநோய் குறித்து  மதுரையில் தொடங்கிய விழிப்புணர்வு பிரசார  வாகனப் பயணம் நாடு முழுவதும் 30 நகரங்கள் வழியாகச் சென்று மீண்டும்  மதுரை வந்தடைந்தது.
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் குழந்தைகள் புற்றுநோய் பற்றி விழிப்புணவை ஏற்படுத்துவதற்காக இந்த பிரசார பயணம் திட்டமிடப்பட்டது. அதன்படி மருத்துவ குழுவினருடன் கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி இந்த பிரசார வாகனம் மதுரையில் இருந்து புறப்பட்டது. 
15 மாநிலங்களில் 30 நகரங்கள் வழியாக ஸ்ரீநகர்  வரை சென்று, குழந்தைப் பருவ புற்று நோய்களை குணப்படுத்த முடியும் என பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 30 நாள்கள் 10 ஆயிரம் கிலோ 
மீட்டர் தூரம்  நடைபெற்ற 
இந்த பயணம் மதுரையில் முடிவடைந்தது. 
இதுகுறித்து மருத்துவமனையின் மார்கெட்டிங் பொது மேலாளர் ஜே.ஆடல் கூறியது: 
உலகளவில் ஆண்டுக்கு 3 
லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோய்த் தாக்குதலை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் 80 சதவீதம் சரி செய்து விடலாம். 
இதனை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த பிரசாரம் நடத்தப்பட்டு வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com