முகநூலில் தீவிரவாதம் பரப்பியவருக்கு முன்ஜாமீன்

முகநூலில் தீவிரவாதம் பரப்பிய தஞ்சையைச் சேர்ந்தவருக்கு முன்ஜாமீன் வழங்கி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.


முகநூலில் தீவிரவாதம் பரப்பிய தஞ்சையைச் சேர்ந்தவருக்கு முன்ஜாமீன் வழங்கி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
      தஞ்சை மாவட்டம்  மல்லிபட்டணத்தைச் சேர்ந்த முகமது இம்ரான் தாக்கல் செய்த மனு: முகநூலில் அவதூறு பரப்பியதாக சேதுபாவசத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முகநூலில், இஸ்லாமியர்கள் ஜிகாத் செய்ய கற்றுக்கொள்ளுங்கள் அல்லது ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள் என பதிவிட்டு, அதை உடனடியாக நீக்கிவிட்டேன். அந்த பதிவை புகைப்படம் எடுத்த போலீஸார், என் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
     நான் சிறையில் உள்ள இஸ்லாமியர்களின் குழந்தைகளுக்கு கல்வி சேவை புரிந்து வருகிறேன். உள்நோக்கத்தின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனினும், போலீஸார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன். எனவே, இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.
     இந்த மனு, நீதிபதி பி. ராஜமாணிக்கம் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, முகமது இம்ரான் சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜிகாத் என்றால் 
கடினமாக உழைத்தல் என்பதும், ஒரே இறைவனை ஏற்றுக்கொண்டு பின்பற்றுதல் என்பதாகும். பிறர் நினைப்பதுபோல் வன்முறையில் ஈடுபடுவது என பொருளாகாது. இதுபோன்ற பதிவுகளை சமூக வலைதளங்களில் இனி பதிவிட மாட்டேன் என பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ராஜமாணிக்கம், மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com