போக்ஸோ சட்டத்தில் வேன் ஓட்டுநர் கைது
By DIN | Published On : 24th June 2019 09:14 AM | Last Updated : 24th June 2019 09:14 AM | அ+அ அ- |

திருங்கலத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வேன் ஓட்டுநரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனர்.
திருமங்கலத்தை அடுத்த தும்பக்குண்டு சிவன்காளை மகன் ராஜபாண்டி (22). இவர் வேன் ஓட்டுநராக உள்ளார். இவர் அதேபகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜபாண்டியை கைது செய்தனர்.