புதிய நிர்வாகிகள் தேர்வு
By DIN | Published On : 04th March 2019 07:25 AM | Last Updated : 04th March 2019 07:25 AM | அ+அ அ- |

இந்திய தொழிலக கூட்டமைப்பு இளையோர் பிரிவு (யங் இந்தியன்ஸ்) மதுரை கிளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை தனியார் விடுதியில் சனிக்கிழமை நடைபெற்ற யங் இந்தியன்ஸ் அமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அபராஜிதா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் எஸ்.எம்.மணிகண்டன் தலைவராகவும்,
கிரேட் இன்னோவஸ் சொல்யூசன் நிறுவன முதன்மை செயல் அலுவலர் ஜி.கல்யாணசுந்தரம் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.