பவர் கிரிட் நிறுவன ஆய்வுக் கூட்டம்

மதுரையில் பவர் கிரிட் இந்திய நிறுவனத்தின் ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 


 மதுரையில் பவர் கிரிட் இந்திய நிறுவனத்தின் ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
இக் கூட்டத்தில், இந்நிறுவனத்தின் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான ரவி பி. சிங் பங்கேற்று,  800 கிலோ வோல்ட் சக்தி கொண்ட ராய்கர்-புகலூர் திருச்சூர் மின் பகிர்மானத் திட்டத்தை விரைந்து முடிக்குமாறு, நிறுவனத்தின் செயல் இயக்குநர்களை கேட்டுக் கொண்டார். 
மேலும் அவர், இத்திட்டம் மூலம் தமிழகம், கேரளம், கர்நாடகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு 6 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் கொண்டு வரப்படும். 
இதில் குறிப்பாக, தமிழகம், கேரளத்தில் ஏற்பட்டு வரும் மின் தட்டுப்பாட்டை தீர்க்க முடியும் என்றார். 
உலகின் மிகப் பெரிய மின் பகிர்மானப் பயன்பாட்டைக் கொண்ட இந்நிறுவனத்துக்கு, 239 துணை மின் நிலையங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com