போக்úஸா சட்டத்தில் இருவர் கைது

மதுரை அருகே 17 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து, கர்ப்பத்தைக் கலைக்குமாறு தகராறு செய்து  வீட்டை விட்டு விரட்டிய கணவர் மற்றும் மாமனாரை, போலீஸார் போக்úஸா சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை


மதுரை அருகே 17 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து, கர்ப்பத்தைக் கலைக்குமாறு தகராறு செய்து  வீட்டை விட்டு விரட்டிய கணவர் மற்றும் மாமனாரை, போலீஸார் போக்úஸா சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, மதுரை மீனாட்சி அரசினர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.  இவரும், எஸ்.ஆலங்குளம்-குலமங்கலம் பிரதான சாலையில் அன்பு நகர் முதல் தெருவைச் சேர்ந்த ராஜபூபதி (35) என்பவரும் பழகி வந்துள்ளனர். 
இந்நிலையில், ராஜபூபதி திருமண ஆசை காட்டி, அச்சிறுமியை தனது சித்தப்பா முருகேசபாண்டியன், சித்தி செல்வராணி மற்றும் உறவினர் வளர்மதி ஆகியோருடன்  ராமநாதபுரத்துக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள முருகன் கோயிலில் திருமணம் செய்துள்ளார்.  அதைத் தொடர்ந்து, இருவரும் எஸ்.ஆலங்குளத்தில் வசித்து வந்துள்ளனர். 
இந்நிலையில், கர்ப்பமடைந்த சிறுமியின் கருவை கலைக்கக் கூறி, ராஜபூபதி மற்றும் அவரது உறவினர்கள் தகராறு செய்து, சிறுமியை வீட்டைவிட்டு விரட்டி விட்டனராம்.
இது குறித்து அந்த சிறுமி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், ராஜபூபதி, முருகேசபாண்டியன் ஆகியோரை போலீஸார் போக்úஸா சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும், செல்வராணி, வளர்மதி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com