பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும்: மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் அறிவுரை

பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்து தொடர்ந்து அவர்களை கண்காணித்து

பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்து தொடர்ந்து அவர்களை கண்காணித்து வளர்க்க வேண்டும் என மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தர் எம்.கிருஷ்ணன் பேசினார்.
பேராசிரியர் மற்றும் எழுத்தாளர் இரா.மோகன் எழுதிய ஒளவை நடராசனின் பன்முகம், நிர்மலா மோகன் எழுதிய உரைவேந்தர் ஒளவை துரைசாமி, லி.ஜன்னத் எழுதிய சாலை இளந்திரையனின் படைப்புலகம் ஆகிய மூன்று நூல்களின் அறிமுக விழா மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள மணியம்மை மழலையர் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
இதில் மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தர் எம்.கிருஷ்ணன் பேசியது: பொள்ளாச்சி சம்பவம் நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுத்து தொடர்ந்து அவர்களை கண்காணித்து வளர்க்க வேண்டும். 
குடும்பங்களில் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு அளவிற்கு அதிகமாக பாசத்தையும், சுதந்திரத்தையும் அளிக்கின்றனர். குழந்தைகளுக்கு பாசம் காட்டுவதில் கட்டுப்பாடு இருக்க வேண்டும். குழந்தைகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கண்காணித்து அவர்களை கண்டிப்புடன் வளர்க்க வேண்டும். மேலும் அவர்களுக்கு நீதிபோதனைகளையும், கால மேலாண்மையையும் கற்றுக்கொடுத்து வளர்க்க வேண்டும் என்றார். 
உலகத்தமிழ்ச் சங்க இயக்குநர் பெ.சந்திரா, மணியம்மை மழலையர் பள்ளித் தாளாளர் பி.வரதராஜன், எழுத்தாளர்கள் இரா.மோகன், நிர்மலா மோகன், லி.ஜன்னத், பேராசிரியர்கள் மு.அருணகிரி, இ.கி.ராமசாமி உள்ளிட்டோர் பேசினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com