மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர் மீது வழக்கு
By DIN | Published On : 24th March 2019 12:49 AM | Last Updated : 24th March 2019 12:49 AM | அ+அ அ- |

தேவர் சிலைக்கு அனுமதியின்றி மாலை அணிவித்ததாக, மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு. வெங்கடேசன் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மதுரையில் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாத அரசியல் கட்சியினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், திமுக கூட்டணியிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான சு.வெங்கடேசன் தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி ச. நடராஜனிடம் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். முன்னதாக, இவர் கூட்டணிக் கட்சியினருடன் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனால், கோரிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து, மதுரை தெற்கு தொகுதி தேர்தல் பறக்கும் படை வட்டாட்சியர் தங்கமீனா, தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், தேர்தல் விதிமுறைகளை மீறி அனுமதியின்றியும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் நடந்துகொண்டதாக, சு. வெங்கடேசன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.