வல்லடிகாரர் சுவாமி கோயில் தேரோட்டம்
By DIN | Published On : 24th March 2019 03:41 AM | Last Updated : 24th March 2019 03:41 AM | அ+அ அ- |

மேலூர் அருகிலுள்ள வல்லடிகாரர் சுவாமி கோயில் பங்குனிப் பொங்கல் விழாவை முன்னிட்டு, தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மேலூர் அருகில் அம்பலகாரன்பட்டியில் அமைந்துள்ள வல்லடிகாரர் சுவாமி கோயில் திருவிழா, கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. வியாழக்கிழமை மஞ்சு விரட்டு நிகழ்ச்சியும், வெள்ளிக்கிழமை உச்சிப் பொங்கல் வைபவமும் நடைபெற்றது.
சனிக்கிழமை காலை தேரோட்டம் நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர், பூரணாதேவி, பொற்கலைதேவி சமேத வல்லடிகாரர் சுவாமி தேரில் எழுந்தருளினார்.
விநாயகர் சின்னத் தேரில் எழுந்தருளினார். கோயிலை வலம் வந்த தேர், பிற்பகல் 1 மணியளவில் நிலையை அடைந்தது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.