தமிழகத்தில் முதல் முறையாக மூளை புற்றுநோய் கட்டி அகற்றம்: மதுரை அரசு மருத்துவர்கள் சாதனை

தமிழகத்தில் முதல் முறையாக மதுரை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நவீன கருவி மற்றும் மருந்து மூலம் மூளையில் உள்ள புற்றுநோய் கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.


தமிழகத்தில் முதல் முறையாக மதுரை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நவீன கருவி மற்றும் மருந்து மூலம் மூளையில் உள்ள புற்றுநோய் கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
 தேனி மாவட்டம் பண்ணைபுரம் அருகே உத்தமதான புரத்தை சேர்ந்தவர் வனராஜ்(63). இவருக்கு மூளையில் புற்று நோய் கட்டி இருந்துள்ளது. இதனால் அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் சுய நினைவு குறைந்துள்ளது. இந்நிலையில், அவர் கடந்த மே 4-ஆம் தேதி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் மூளையில் புற்று நோய் கட்டி இருப்பதை உறுதி செய்தனர்.
மருத்துவமனை முதல்வர் கே.வனிதா அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைத்தார். இதையடுத்து, அண்மையில் அறுவை சிகிச்சைக்கென வாங்கப்பட்ட நவீன உபகரணங்களைக் கொண்டு மே 9-ஆம் தேதி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையில், ரூ.2 கோடி மதிப்பிலான லைக்கா மைக்ராஸ்கோப், மூளை புற்று நோய் அகற்ற பயன்படுத்தப்படும் எப்.எல் 560 என்ற நவீன மருந்து  தமிழகத்தில் முதல் முறையாக மதுரை பல்நோக்கு மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 
   கட்டி அகற்றப்பட்ட பின் வனராஜ் சுயநினைவுடன் நலமாக இருப்பதாகவும், அவருக்கு புற்றுநோய் பரவாமல் தடுக்க கதிரியக்க மற்றும் மருந்து சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 மருத்துவர் ஸ்ரீசரவணன் தலைமையில், மருத்துவர்கள் சிவக்குமார், மோகன்ராஜ், ராஜசைத்தன்யரெட்டி, விஜய் ஆனந்த் மற்றும் மயக்கவியல் நிபுணர்கள் கல்யாணசுந்தரம், கவிதா ஆகியோர் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.
 திண்டுக்கல் நாகல் நகரைச் சேர்ந்தவர் சக்திவேல்(31). இவருக்கு தலையில் 5 கிலோ கட்டியுடன் நீண்ட நாளாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனை முதல்வர் கே.வனிதா பரிந்துரையின் பேரில், பல்நோக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தலையிலிருந்த 5 கிலோ கட்டி அகற்றப்பட்டது. அறுவைச் சிகிச்சைக்கு பிறகு சக்திவேல் நலமாக இருப்பதாகவும், இதுவரை மதுரை அரசு மருத்துவமனையில் 5 கிலோ அளவில் பெரிய கட்டி அகற்றியதில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com