திருப்பரங்குன்றம் தேர்தலில் போட்டியிட்ட  35  வேட்பாளர்கள் "டெபாசிட்' இழப்பு

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட 35  வேட்பாளர்கள் "டெபாசிட்' இழந்தனர்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட 35  வேட்பாளர்கள் "டெபாசிட்' இழந்தனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட 9 கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும், 27 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 37 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில்  திமுக வேட்பாளர் மருத்துவர் சரவணன் 85 ஆயிரத்து 434 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அதிமுக வேட்பாளர் எஸ்.முனியாண்டி 83 ஆயிரத்து 38 வாக்குகள் பெற்று இரண்டாமிடமும்,
 அமமுக வேட்பாளர் ஐ. மகேந்திரன் 31,152 வாக்குகள் பெற்று  மூன்றாவது இடமும், மக்கள் நீதி மய்யம்   வேட்பாளர் சக்திவேல் 12,592 வாக்குகளும் பெற்று நான்காவது இடத்தை பிடித்தனர்.
இடைத்தேர்தலில்  அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட அனைத்து மக்கள் புரட்சி கட்சி வேட்பாளர் ஜெ.செந்தில்ராஜா  124 வாக்குகளையும்,  தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளற் பொ. செல்லப்பாண்டியன் 78 வாக்குகளையும்,  ஊழல் ஒழிப்பு செயலாக்கக் கட்சி வேட்பாளர் ஏ.தேவசகாயம்  75 வாக்குகளையும், இந்திய குடியரசுக் கட்சி வேட்பாளர் பூ.நாகராஜா  93 வாக்குகளையும், நாம் இந்திய கட்சி வேட்பாளற் ம.முத்து  130 வாக்குகளையும் ,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரா.ரேவதி  5,467 வாக்குகளையும்  பெற்றனர்.
சுயேச்சை வேட்பாளர்கள்  அக்னி  ஸ்ரீராமச்சந்திரன்  313 ,  எஸ்.ஆறுமுகம் 120,  ஆர். ஆறுமுகம் 490,  உக்கிரபாண்டியன்  243,  கோபாலகிருஷ்ணன் 219,   கோபிநாத்  274,  சந்திரகாசன்  177 ,  சரவணன் யாதவ்  357,  சிவா 245 , சுப்பிரமணி  375,  சேகர்150  வாக்குகளைப் பெற்றனர்.
மேலும்,  நா.நாகராஜன்  167,  ப. நாகராஜ்  218 யும்,  பத்மராஜன்  55 ,  பூவநாதன்  95, பொன்ராஜ் 157,  கே மகேந்திரன்  408,  ஆ.மணி  41 , மணிகண்டன் 65,  மன்னன் 84 , முருகன்  624 ,   கு. முனியாண்டி175 ,   கோ. முனியாண்டி 153,   மூ. முனியாண்டி 122, ரமேஷ்   145 ,  ராஜன் 78 ,  வைர சீமான் 73 வாக்குகளைப் பெற்றனர். நோட்டாவிற்கு 2184 வாக்குகள் கிடைத்தன. இதில் திமுக, அதிமுக தவிர்த்து மற்ற 35 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com