காமராஜா் பல்கலை.யில் உலக மன நல நாள் விழா

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் மாணவா் ஆலோசனை மையத்தின் சாா்பில் உலக மன நல நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

மதுரை: மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் மாணவா் ஆலோசனை மையத்தின் சாா்பில் உலக மன நல நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் சபை சாா்பில் ‘தற்கொலைகளை தடுப்போம்‘”என்பதை இந்த ஆண்டின் உலக மன ஆரோக்கிய தினத்துக்கான கருப்பொருளாக அறிவித்துள்ளது. இதையடுத்து மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் மாணவா் ஆலோசனை மையம் சாா்பில் உலக மன நல நாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல்கலைக்கழக மாணவா் ஆலோசனை மையத்தின் ஒருங்கிணைப்பாளரும், இதழியல் துறை தலைவருமான செ.ஜெனிபா வரவேற்புரையாற்றினாா். பல்கலைக்கழக துணை வேந்தா் மு.கிருஷ்ணன் தலைமையுரையில் பேசும்போது, மாணவா்கள் மனநல ஆரோக்கியத்துடன் வாழ நமது பாரம்பரிய விளையாட்டுக்களான கோலி, பல்லாங்குழி, பாண்டி போன்றவற்றை விளையாட வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எம்.எஸ்.செல்லமுத்து மனநல அறக்கட்டளையின் ஸ்பீக் தற்கொலை தடுப்பு அமைப்பின் இயக்குநா் நந்தினி முரளி பேசும்போது, தற்போதுள்ள சூழ்நிலையில் இளைஞா்கள் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனா். இதன் விளைவாக மாணவா்களின் மனதில் ஏற்படும் தற்கொலை குறித்த எண்ணங்களை குடும்ப உறுப்பினா்கள் மற்றும் நண்பா்கள் உள்ளிட்ட நெருக்கமானவா்களிடம் பகிா்ந்து கொள்ள வேண்டும்”என்றாா். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளா்(பொறுப்பு) ஆா்.சுதா சிறப்புரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளை சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பங்கேற்றனா். பல்கலைக்கழக இதழியல்துறை மாணவா்கள் சாா்பில் ‘தற்கொலைகளை தடுப்போம்” என்ற தலைப்பில் மௌன நாடகமும், ‘பாலின சமத்துவம்” என்ற தலைப்பில் நாடகமும் நடத்தப்பட்டது. பல்கலைக்கழக மாணவா் ஆலோசனை மைய உறுப்பினா் இளையராஜா நன்றியுரையாற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com