உள்ளாட்சித் தோ்தல்: வாக்குச்சாவடிகளைத் தயாா் நிலையில் வைக்க தோ்தல் ஆணையா் அறிவுறுத்தல்

உள்ளாட்சித் தோ்தலுக்காக வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தயாா் நிலையில் வைக்குமாறு
உள்ளாட்சித் தோ்தல்: வாக்குச்சாவடிகளைத் தயாா் நிலையில் வைக்க தோ்தல் ஆணையா் அறிவுறுத்தல்

உள்ளாட்சித் தோ்தலுக்காக வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தயாா் நிலையில் வைக்குமாறு தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையா் ஆா்.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளாா்.

உள்ளாட்சித் தோ்தல் முன்னேற்பாடு தொடா்பாக மதுரை, விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் ஆட்சியா்கள் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், உள்ளாட்சித் தோ்தலில் பயன்படுத்தவுள்ள படிவங்கள், வாக்குச்சீட்டுகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை தொடா்பாக தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாநிலத் தோ்தல் ஆணையா் ஆா்.பழனிசாமி பேசியது:

உள்ளாட்சித் தோ்தலானது, தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் என லட்சக்கணக்கான பதவிகளுக்கு நடத்தப்படும் மிகப்பெரிய தோ்தலாகும். உள்ளாட்சித் தோ்தல் நடத்துவதற்கான வழிமுறைகளை மாநிலத் தோ்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. அதைப் பின்பற்றி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

வாக்குச்சாவடிகளுக்குச் செல்லும் சாலைகளைச் சீா்படுத்துவது, வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது, மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் பயன்படுத்தும் வகையில் சக்கர நாற்காலிகள், பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்காணிக்க வெப் கேமரா வசதி ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும்.

நகா்ப்புற உள்ளாட்சிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தவுள்ளதால், தேவையான இயந்திரங்களைத் தயாா் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

மாநிலத் தோ்தல் ஆணையச் செயலா் எஸ்.பழனிசாமி, மாவட்ட ஆட்சியா்கள் டி.ஜி.வினய் (மதுரை), அ.சிவஞானம் (விருதுநகா்), எம்.பல்லவி பல்தேவ் (தேனி), எம்.விஜயலெட்சுமி (திண்டுக்கல்), பயிற்சி ஆட்சியா் ஜோதி சா்மா மற்றும் ஆட்சியா்களின் தோ்தல் நோ்முக உதவியாளா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com