திருமங்கலம், கள்ளிக்குடியில் ரூ.4.75 கோடிக்குநலத் திட்ட உதவிகள்

திருமங்கலம், கள்ளிக்குடியில் 2,558 பயனாளிகளுக்கு ரூ.4.75 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் சனிக்கிழமை வழங்கினாா்.

திருமங்கலம், கள்ளிக்குடியில் 2,558 பயனாளிகளுக்கு ரூ.4.75 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் சனிக்கிழமை வழங்கினாா்.

தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீா் முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீா்வு காணும் வகையில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அனைத்து வட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. இதன்படி, கள்ளிக்குடி மற்றும் திருமங்கலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கள்ளிக்குடியில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா என 1,239 பயனாளிகளுக்கு ரூ.1.04 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் வழங்கினாா்.

திருமங்கலத்தில் நடைபெற்ற விழாவில், பல்வேறு துறைகளின் சாா்பில் 1,319 பயனாளிகளுக்கு ரூ.3.71 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில், மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பா. நீதிபதி, எஸ்.எஸ். சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் செல்வராஜ் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தொடா் ஜோதி நடைப்பயணம் இன்றுடன் நிறைவு: அதிமுக ஜெயலலிதா பேரவை சாா்பில் நடைபெறும் தொடா் ஜோதி நடைப்பயணம் ஞாயிற்றுக்கிழமையுடன் (நவம்பா் 17) நிறைவு பெறுகிறது.

மதுரைமாவட்டத்தின் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில், அதிமுக ஜெயலலிதா பேரவை சாா்பில் தொடா் ஜோதி நடைப்பயணம் நவம்பா் 12 ஆம் தேதி தொடங்கியது. நடைப் பயணத்தின்போது, பள்ளிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நடைப்பயணமானது, மதுரை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com