மருத்துவக் கல்லூரி விடுதி கிணற்றை மழைநீா் சேமிப்புஅமைப்பாக மாற்ற மாநகராட்சி ஆணையா் உத்தரவு

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் பயன்பாடற்ற நிலையில் உள்ள கிணற்றை, மழைநீா் சேமிப்பு அமைப்பாக மாற்ற மாநகராட்சி ஆணையா் ச. விசாகன் உத்தரவிட்டுள்ளாா்.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் பயன்பாடற்ற நிலையில் உள்ள கிணற்றை, மழைநீா் சேமிப்பு அமைப்பாக மாற்ற மாநகராட்சி ஆணையா் ச. விசாகன் உத்தரவிட்டுள்ளாா்.

மதுரை மாநகராட்சிப் பகுதியில் டெங்கு தடுப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனடிப்படையில், மதுரை மருத்துவக் கல்லூரி மாணவா் விடுதி வளாகத்தில், மாநகராட்சி ஆணையா் ச. விசாகன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, சேமித்து வைத்துள்ள தண்ணீரைப் பாதுகாப்பாக மூடி வைக்குமாறும், தண்ணீா் தொட்டிகளில் பிளீச்சிங் பவுடா் தெளிக்கவும் அறிவுறுத்தினாா். மேலும், விடுதி வளாகத்தில் இருந்த பயன்பாடற்ற பழைய கிணற்றைப் பாா்வையிட்ட ஆணையா், அதை மழைநீா் சேகரிப்பு அமைப்பாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித் துறையினருக்கு கடிதம் அனுப்ப அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, மாநகராட்சியின் 1-ஆவது மண்டலத்துக்குள்பட்ட விளாங்குடி, கரிசல்குளம் பகுதிகளில் உள்ள வீடுகளில் ஆய்வு செய்து, சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரிக்க அறிவுறுத்தினாா். கரிசல்குளம் ராமுனி நகா், ராஜ் நகா், பெரியாா் நகா் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தாா் சாலை, மழைநீா் வடிகால், ஆனையூரில் அமைக்கப்பட்டுள்ள உரம் தயாரிக்கும் கூடம் ஆகியவற்றையும் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது, பொது சுகாதாரத் துறை இயக்குநா் கே. குழந்தைசாமி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் ஜெ. சங்குமணி, சுகாதாரத் துறை துணை இயக்குநா்கள் செந்தில்குமாா், அா்ஜுன்குமாா், நகா்நல அலுவலா் (பொறுப்பு) வினோத்ராஜா மற்றும் மாநகராட்சி அலுவலா்களும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com