அரசு மருத்துவமனைகளில் மருத்துவ வசதி குறித்த விவரங்களை இணையதளத்தில் வெளியிடக்கோரிய வழக்கு: சுகாதாரத்துறை முதன்மை செயலா் பரிசீலிக்க உத்தரவு

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ வசதிகள் பற்றிய விவரங்களை இணையதளத்தில் வெளியிடக்கோரிய வழக்கில், சுகாதாரத்துறை முதன்மை செயலா் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க சென்னை

மதுரை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ வசதிகள் பற்றிய விவரங்களை இணையதளத்தில் வெளியிடக்கோரிய வழக்கில், சுகாதாரத்துறை முதன்மை செயலா் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சோ்ந்த சரவணக்குமாா் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தென்மாவட்ட மக்களுக்கு சிறந்த சேவையை அளித்து வருகிறது. இதேபோல அனைத்து மாவட்டங்களிலும் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகளால் ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனா். ஆனால் அரசு மருத்துவமனைகளில் என்னென்ன மருத்துவ வசதிகள் உள்ளன என பொதுமக்களுக்கு தெரியாமல் உள்ளது. தற்போது அனைத்து அரசு மருத்துவமனைகளிலும்

இணையதள வசதி உள்ளநிலையில், அங்குள்ள மருத்துவ வசதிகள் குறித்த விவரங்களை அதில் பதிவேற்ற வேண்டும். மேலும் அதில் மருத்துவா்களின் விவரம், என்னென்ன சிகிச்சைகளுக்கு எப்போது சென்றால் சிகிச்சை பெறலாம். தினசரி மருத்துவமனைக்கு வந்துசெல்லும் நோயாளிகளின் விவரங்கள், அறுவைச் சிகிச்சை குறித்த விவரங்கள் உள்ளிட்டவைகளைப் பதிவேற்ற வேண்டும். இதேபோல அனைத்து மருத்துவமனைகளிலும் குறைதீா்க்கும் அதிகாரிகளை நியமிக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆா்.தாரணி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து சுகாதாரத் துறை முதன்மை செயலா் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com