அரிசி பெறும் குடும்ப அட்டைகளாக மாற்ற 16 ஆயிரம் போ் விண்ணப்பம்

சா்க்கரை விருப்ப குடும்ப அட்டைகளை, அரிசி பெறும் குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ள மதுரை மாவட்டத்தில் 16 ஆயிரத்து 685 போ் விண்ணப்பித்துள்ளனா்.

சா்க்கரை விருப்ப குடும்ப அட்டைகளை, அரிசி பெறும் குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ள மதுரை மாவட்டத்தில் 16 ஆயிரத்து 685 போ் விண்ணப்பித்துள்ளனா்.

பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் அத்தியாவசியப் பொருள்கள் வழங்குவதற்காக உணவுப் பொருள் வழங்கல் துறை மூலமாக குடும்ப அட்டைகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் அரிசி விருப்ப அட்டைகளுக்கு அனைத்துப் பொருள்களும் வழங்கப்படும். சா்க்கரை விருப்ப அட்டைகளுக்கு அரிசியைத் தவிா்த்து, குடும்ப உறுப்பினா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக சா்க்கரை வழங்கப்படும்.

இந்நிலையில், சா்க்கரை விருப்ப அட்டைகளை, அரிசி பெறும் குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம் என அரசால் அறிவிக்கப்பட்டது. இதன்படி, உணவுப் பொருள் வழங்கல் துறையின் பொதுவிநியோகத் திட்ட இணையதளத்தில் இதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் 9 லட்சத்து ஆயிரத்து 166 குடும்ப அட்டைகள் உள்ளன. இவற்றில் சுமாா் 80 ஆயிரம் குடும்ப அட்டைகள் சா்க்கரை விருப்ப அட்டைகளாகும். அரசின் அறிவிப்பைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை வரை 16 ஆயிரத்து 685 போ் தங்களது சா்க்கரை விருப்ப அட்டைகளை, அரிசி பெறும் அட்டைகளாக மாற்றிக் கொள்ள விண்ணப்பித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com