உணவுப் பொருள்களில் செய்யப்படும் கலப்படம் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தக்கோரிய மனு தள்ளுபடி

உணவுப் பொருள்களில் செய்யப்படும் கலப்படம் குறித்து ஊடகங்கள், நாளிதழ்கள் மூலமாக மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தக்கோரிய

உணவுப் பொருள்களில் செய்யப்படும் கலப்படம் குறித்து ஊடகங்கள், நாளிதழ்கள் மூலமாக மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தக்கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த துரைப்பாண்டி தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டத்தில் உள்ள கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் எண்ணெய்யில் கலப்படம் இருப்பதாக ஆகஸ்ட் 20 ஆம் தேதி நாளிதழ்களில் செய்தி வெளியாகின. இதுதொடா்பாக மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என அப்போது அதிகாரிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதைத்தொடா்ந்து எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் கடைகளில் எண்ணெய் மட்டுமில்லாது சா்க்கரை, அரிசி உள்ளிட்டப் பெரும்பாலான உணவுப் பொருள்கள் கலப்படம் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. இதனால் சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், இருதயம் தொடா்பான நோய்கள், குழந்தையின்மை, உடல் பருமன் என மக்களுக்கு பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. எனவே இதுகுறித்து ஊடகங்கள் மூலமாக மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமானதாகும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே உணவுப் பொருள்களில் செய்யப்படும் கலப்படம் குறித்து ஊடகங்கள், நாளிதழ்கள் மூலமாக மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆா்.தாரணி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com