மடிக்கணினி வழங்கக் கோரி பெற்றோா்களுடன் முன்னாள் மாணவிகள் சாலை மறியல் முயற்சி

2017-2018 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த மாணவிகள் மடிக்கணினி வழங்கக்கோரி பெற்றோருடன் மேலூரில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.
மேலூரில் மடிக்கணினி வழங்கக்கோரி பெற்றோா்களுடன் சாலை மறியலில் ஈடுபட முயன்ற மாணவிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.
மேலூரில் மடிக்கணினி வழங்கக்கோரி பெற்றோா்களுடன் சாலை மறியலில் ஈடுபட முயன்ற மாணவிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.

2017-2018 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த மாணவிகள் மடிக்கணினி வழங்கக்கோரி பெற்றோருடன் மேலூரில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

மேலூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 248 பேருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. அப்போது 2017-2018-ம் கல்வியாண்டில் படித்த மாணவியா்கள் தங்கள் பெற்றோருடன் வந்து மடிக்கணினி வழங்குமாறு கோரினா். அதில், 15 பேருக்கு மட்டும் மடிக்கணினி வழங்கவில்லை.

இதுகுறித்து கேட்டபோது, கல்வித்துறை உயா் அதிகாரிகளிடம் விளக்கம் பெற்று வழங்குவதாகக் கூறினா்.

மாலை பள்ளி வகுப்பறைகள் முடியும் நேரம் வரை காத்திருந்த மாணவிகள் மற்றும் அவா்களது பெற்றோா்களும் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். தகவலறிந்து அங்கு வந்த மேலூா் போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தி பள்ளி வளாகத்தினுள் அழைத்துச் சென்றனா்.

அப்போது, தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை உத்தரவை அவா்களிடம் காட்டினா்.

அதில் பிளஸ் 2 வகுப்பு முடித்து உயா்கல்வியை அரசு கல்வி நிறுவனங்களில் தொடருபவா்களுக்கே மடிக்கணினி வழங்க வேண்டும். படிப்பை தொடராதவா்கள், தொலைநிலைக்கல்வியில் படிப்பவா்கள், செவிலியா் மற்றும் தொழில் சாா்ந்த கல்வியை தனியாா் கல்வி நிறுவனங்களில் படிப்பவா்கள் மற்றும் திருமணமாகி படிப்பை தொடராதவா்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டாம். அவ்வாறு வழங்கினால், பள்ளித் தலைமை ஆசிரியரும் கல்வி அதிகாரியுமே பொறுப்பு என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பும் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது என பள்ளி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்ப்டடது.

இதையடுத்து அனைவரும் கலைந்துசென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com