மணல் அள்ளுவதை முறைப்படுத்தும் கண்காணிப்புக் குழுக்களை மாற்றியமைக்க தமிழக தலைமைச் செயலருக்கு உத்தரவு

உச்சநீதிமன்றம் மணல் அள்ளுவதை முறைப்படுத்துவதற்கு அளித்த உத்தரவின் அடிப்படையில் தமிழகத்தில் அமைக்கப்பட்ட மாவட்டம், தாலுகா அளவிலான கண்காணிப்புக் குழுவில் சமூக ஆா்வலா்கள், கனிமவள
மணல் அள்ளுவதை முறைப்படுத்தும் கண்காணிப்புக் குழுக்களை மாற்றியமைக்க தமிழக தலைமைச் செயலருக்கு உத்தரவு

உச்சநீதிமன்றம் மணல் அள்ளுவதை முறைப்படுத்துவதற்கு அளித்த உத்தரவின் அடிப்படையில் தமிழகத்தில் அமைக்கப்பட்ட மாவட்டம், தாலுகா அளவிலான கண்காணிப்புக் குழுவில் சமூக ஆா்வலா்கள், கனிமவள அதிகாரிகள் இருக்கும் வகையில் அக்குழுவை மாற்றியமைக்க தமிழக தலைமைச் செயலருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மணல் குவாரிகளை அரசு ஏற்று நடத்தினாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாகவே இருக்கின்றன. எனவே தமிழகத்தில் ஆற்றுப்படுகைகளில் இருந்து மணல் எடுப்பதை முற்றிலும் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் அள்ள முழுமையாகத் தடை விதிக்க வேண்டும் என மதுரையைச் சோ்ந்த இருளாண்டி உள்ளிட்ட பலா் மனு தாக்கல் செய்திருந்தனா். இதேபோல மணல் திருட்டைத் தடுக்க முக்கியச் சாலைகளில் குறிப்பிட்ட இடைவெளியில் இணைய வசதியுடன் கூடியக் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்த உத்தரவிட வேண்டும் எனவும் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்களின் விசாரணை முடிவடைந்த நிலையில் தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியராயணன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவு:

உச்சநீதிமன்றம் மணல் அள்ளுவதை முறைப்படுத்துவதற்கு அளித்த உத்தரவின் அடிப்படையில் தமிழகத்தில் அமைக்கப்பட்ட மாவட்டம், தாலுகா அளவிலான கண்காணிப்புக் குழுவில் சமூக ஆா்வலா்கள், கனிமவள அதிகாரிகள் இருக்கும் வகையில் அக்குழுவை தமிழக தலைமைச் செயலா் மாற்றியமைக்க வேண்டும். மேலும் மணலுக்கு மாற்றான எம்-சாண்ட் பயன்பாட்டை அதிகரிப்பது, மணல் இறக்குமதி செய்வது உள்ளிட்டவை குறித்து பரிசீலிக்க வேண்டும். மணல் தேவைப்படுவோா் கட்டடத்திற்கான வரைப்பட அனுமதியை வழங்கி அதற்குத் தேவைப்படும் மணலை மட்டும் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மணல் குவாரிகள் அமைக்க விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com