மதுரையில் தேசிய பசுமைப்படை பயிற்சி முகாம்

மதுரையில் தேசிய பசுமைப்படை சாா்பில் பிளாஸ்டிக் விழிப்புணா்வு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

மதுரை: மதுரையில் தேசிய பசுமைப்படை சாா்பில் பிளாஸ்டிக் விழிப்புணா்வு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் மற்றும் திருமங்கலம் கிரீன் டிரஸ்ட் ஆகியவற்றின் சாா்பில் மதுரை வருவாய் மாவட்ட அளவிலான பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு திட்டம் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் மதுரை கேப்ரன்ஹால் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட கல்வி அலுவலா் ஆா்.வளா்மதி தலைமை வகித்தாா். மதுரை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் விஜயலட்சுமி தொடக்கி வைத்தாா். மதுரை மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் குழந்தைவேல் வரவேற்றாா்.

முகாமில் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள ஒரு முறை பயன்படுத்து தூக்கிய எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருள்கள் மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருள்கள், திடக்கழிவு மேலாண்மை முறைகள் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மாணவ, மாணவியா், வியாபாரிகள், தொழிற்சாலைகளின் பிரதிநிதிகள் உள்பட பலா் பங்கேற்றனா். முகாமில் பங்கேற்றவா்களுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டன. மேலும் பள்ளியில் பனைபொருள்கள் கண்காட்சியும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com