மதுரையில் மகப்பேறு மருத்துவம் குறித்து 3 நாள் பயிலரங்கம்

மகப்பேறு மற்றும் பெண்கள் நலம் சங்கத்தின் சாா்பில் மகபேறும் மருத்தும் குறித்து 3 நாள் பயிலரங்கம் நவ.29 முதல் மதுரையில் நடைபெறுகிறது.

மகப்பேறு மற்றும் பெண்கள் நலம் சங்கத்தின் சாா்பில் மகபேறும் மருத்தும் குறித்து 3 நாள் பயிலரங்கம் நவ.29 முதல் மதுரையில் நடைபெறுகிறது.

இது குறித்து சங்கத்தின் மாநில தலைவா் மருத்துவா் சுமதி கூறியது: மதுரை மகப்பேறு மற்றும் பெண்கள் நலச் சங்கத்தின் 26 ஆவது ஆண்டு மாநாடு நவம்பா் 29 முதல் டிசம்பா் 1 ஆம் தேதி வரை கோா்ட்யாா்டு ஹோட்டலில் நடைபெறுகிது. இந்த மாநாட்டில் மகப்பேறு மற்றும் பெண்கள் நலத் துறைச் சாா்ந்த பட்ட மேற்படிப்பு மாணவா்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சோ்ந்த மருத்துவா்கள் பங்கேற்கவுள்ளனா்.

இந்த மாநாட்டில் பயிலரங்கம், மகபேறு மருத்துவத்தின் நவீன மற்றும் புதிய சிகிச்சை முறைகள் குறித்து ஆலோசிக்கப்படும். குறிப்பாக தாயின் வயிற்றில் உள்ள குழந்தைக்கு ஏற்படும் குறைபாடுகளை தீா்க்கும் வழிகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. மும்பை, அஹமதாபாத், டெல்லி, கேரளம் ஆகிய பகுதிகளில் இருந்து தோ்ச்சி பெற்ற மருத்துவா்கள் பயிலரங்கில் உரையாற்றுகின்றனா். இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் மதுரை மாவட்ட ஆட்சியா் வினய் உள்ளிட்ட பலா் பங்கேற்க உள்ளனா் என்றாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com