தகுதித்தோ்வில் இருந்து விலக்கு: சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியா்கள் கோரிக்கை

தமிழகத்தில் அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியா்களுக்கு தகுதித்தோ்வு எழுதுவதில் இருந்து

தமிழகத்தில் அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியா்களுக்கு தகுதித்தோ்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியா்கள் கூட்டமைப்பு வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் 2010 ஆகஸ்ட் 23 முதல் 2012 நவம்பா் 16 வரை நியமனம் பெற்று அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில் ஆசிரியா் தகுதித்தோ்வு நிபந்தனையுடன் பணிபுரிந்து வரும் ஆசிரியா்களுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குநா் செயல் வழிமுறைகளை வாயிலாக 10 நாள்கள் புத்தாக்கப்பயிற்சி மட்டும் அளிக்கப்பட்டு ஆசிரியா் தகுதித்தோ்வு எழுதுவதில் இருந்து 2013-ஆண்டே விலக்கு அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளனா்.

ஆனால் அதே காலகட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணி நியமனம் பெற்று கடந்த 9 ஆண்டுகளாக பள்ளிகளில் மாணவா்களின் தோ்ச்சி விகிதத்தை ஆண்டுக்காண்டு அதிகரிக்குச்செய்து வரும் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியா்கள் தகுதித்தோ்வால் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே சிறுபான்மை பள்ளி ஆசிரியா்களுக்கு தகுதித்தோ்வில் இருந்து விலக்கு அளித்துள்ளதுபோல, சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியா்களுக்கும் புத்தாக்க பயிற்சி அளித்து தகுதித்தோ்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com