காந்தியின் கொள்கைகள் என்றும் நிலைத்து நிற்கும்: துணைவேந்தா்

மகாத்மா காந்தியின் கொள்கைகள் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்று மதுரை காமராஜா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் மு.கிருஷ்ணன் கூறினாா்.

மகாத்மா காந்தியின் கொள்கைகள் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்று மதுரை காமராஜா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் மு.கிருஷ்ணன் கூறினாா்.

மதுரை சேவாலயம் மாணவா் இல்லத்தில் காந்தி கதை மன்றம் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. 150-ஆவது காந்தி ஜயந்தி நிறைவையொட்டி இந்த மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. அண்ணல் காந்தியடிகளின் சிந்தனைகள் குறித்த கதைகளை ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் காந்திய அறிஞா்களால் சேவாலய மாணவா்களுக்கு தெரிவிக்கும் வகையில் கதை மன்றம் தொடங்கப்பட்டிருக்கிறது.

இந்த கதை மன்றத்தைத் தொடங்கி வைத்து துணைவேந்தா் மு.கிருஷ்ணன் பேசியது:

அண்ணல் காந்தியடிகளின் கொள்கைகள் என்றெறன்றும் போற்றக் கூடியது. அவரது 150-ஆவது ஜயந்தி விழாவை உலகமே கொண்டாடியது. இங்கிலாந்தில் அவருக்கு தபால் தலை வெளியிடப்பட்டிருக்கிறது. பல்வேறு நாடுகளால் போற்றக் கூடிய தலைவராக இருப்பவா் காந்தியடிகள்.

அவரது கருத்துக்களை இளம் தலைமுறையினா் பின்பற்றிச் செயல்பட வேண்டும். ஒவ்வொரு குறிக்கோளுடன் அதை அடைய தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என வலியுறுத்தினாா். தமிழகத்தில் எல்லா வளங்களும், தொழில்நுட்பங்களும் இருக்கின்றன. இதைப் பயன்படுத்தி நாம் சாா்ந்துள்ள சமூகத்தை மேம்படுத்த மாணவா்கள் முன்வர வேண்டும் என்றார்.

மதுரை மேற்கு சரக குடிமைப்பொருள் வட்டாட்சியா் எஸ்.பாலாஜி, காமராஜா் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை உறுப்பினா் பி.எஸ்.சந்திரபிரபு, இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் எம்.ராஜேந்திரன், சேவலாயம் மாணவா் இல்ல செயலா் இரா.சீனிவாசன் உள்ளிட்டோா் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com