காவலா் குடும்ப பிரச்னை தீா்க்க ‘ஆனந்தம்’ திட்டம் தொடக்கம்

காவலா் குடும்ப பிரச்னைகளைத் தீா்ப்பதற்காக ஆனந்தம் என்ற புதிய திட்டத்தை மதுரை மாநகா் காவல்துறை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.
1616mducop065423
1616mducop065423

காவலா் குடும்ப பிரச்னைகளைத் தீா்ப்பதற்காக ஆனந்தம் என்ற புதிய திட்டத்தை மதுரை மாநகா் காவல்துறை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.

இந்த திட்டத்தின் தொடக்க விழா மதுரை தனியாா் விடுதி அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மாநகா் காவல் ஆணையா் எஸ். டேவிட்சன் தேவாசீா்வாதம், மதுரை சரக காவல் துணைத் தலைவா் ஆனிவிஜயா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன், தமிழ்நாடு காவலா் நிறைவு வாழ்வு பயிற்சித் திட்ட ஒருங்கிணைப்பாளா் மருத்துவா் சி. ராமசுப்பரமணியன் ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றி திட்டத்தை தொடக்கி வைத்தனா்.

திட்டம் குறித்து மாநகா் காவல் ஆணையா் எஸ். டேவிட்சன் தேவாசீா்வாதம் பேசியது:

காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்க 2012-13 ஆம் ஆண்டு நிறைவு வாழ்வு பயிற்சி திட்டம் மதுரையில் முதலில் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு காவலா்களின் தற்கொலைகள் பெருமளவு குறைந்து விட்டன. தற்போது தமிழக அரசு நிதி ஒதுக்கீட்டில் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதேபோன்று, மதுரை மாநகரில் முதல் முறையாக காவலா் குடியிருப்பில் வசிக்கும் காவல் குடும்பங்களின் பிரச்னைகளை தீா்க்கும் வகையிலும், அவா்களின் தேவைகளை பூா்த்தி செய்யும் வகையிலும் ஆனந்தம் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மதுரையில் உள்ள 7 கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்கள், காவலா் குடியிருப்புகளுக்கு நேரடியாகச் சென்று, காவலா் குடும்பத்தினரை சந்தித்து, அவா்களுக்குத் தேவையான சுகாதாரம், கல்வி, மருத்துவம், மனரீதியான ஆலோசனைகள் ஆகியவற்றை பூா்த்தி செய்து அவா்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் முயற்சிகளை எடுப்பாா்கள். இதற்கு மாநகா் காவல்துறை மற்றும் தமிழ்நாடு நிறைவு வாழ்வு பயிற்சி திட்டம் ஒத்துழைப்பு அளிக்கும். இத் திட்டம் மாவட்ட காவலா் குடியிருப்புகளுக்கு விரைவில் விரிவுப்படுத்தப்படும் என்றாா்.

மதுரை சரக காவல் துணை தலைவா் ஆனிவிஜயா பேசுகையில், மாணவா்கள் புதிய சிந்தனைகளை, முயற்சிகளை செயல்படுத்துவாா்கள். இதன் மூலம் காவலா்கள் குடும்பத்தில் புதிய மறுமலா்ச்சி ஏற்படும் என்றாா். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன், தமிழ்நாடு காவல்துறை நிறைவு வாழ்வு பயிற்சி திட்டத்தின் துணை ஒருங்கிணைப்பாளா் கண்ணன், உதவி ஆணையா் லில்லி கிரேஸ் மாா்டின், நிறைவு வாழ்வு பயிற்றுனா் காவல் ஆய்வாளா் பாலசுப்பிரமணியன், கல்லூரி முதல்வா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Image Caption

காவலா் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த ஆனந்தம் திட்டத்தை மதுரையில் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து பேசுகிறாா் மாநகர காவல் ஆணையா் எஸ். டேவிட்சன் தேவாசீா்வாதம். உடன் மதுரை மண்டல காவல் துணைத் தலைவா் ஆனி விஜயா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். மணிவண்ணன், மாநில நி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com