தனியார் நிறுவனத்தில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.8 லட்சம் மோசடி

திருநகரில் தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 8 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக

திருநகரில் தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 8 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக அதன் மேலாளர் உள்பட  6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
 திருநகர் 1 ஆவது பேருந்து நிறுத்தம் அருகே தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இங்கு மதுரை தத்தனேரியைச்  சேர்ந்த சந்தனபாண்டி என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் மேலாளராக பணிபுரிந்தார். நிதி நிறுவனத்தில் கடந்த சில நாள்களுக்கு முன் மேலதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ரூ.8 லட்சம் மதிப்பிலான போலி நகைகள் அடகு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 
இது தொடர்பான விசாரணையில் சந்தனப்பாண்டிக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது குறித்து அதன் உதவி மேலாளர் வேல்முருகன் அளித்த புகாரின்பேரில்,  சந்தனபாண்டி, தத்தனேரியைச் சேர்ந்த காமராஜ்,  திருநகரைச் சேர்ந்த சூரியகலா, விளாங்குடியைச் சேர்ந்த சுரேந்திரன், வெங்கடேஷ்பாபு, மதுரை இந்திராணி நகரைச் சேர்ந்த சரவணன் ஆகிய 6 பேர் மீது திருநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, காமராஜ், வெங்கடேஷ்பாபு ஆகிய இருவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 4 பேரைத் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com