முல்லைப் பெரியாறு அணையில் இருந்து ஒரு போக பாசனத்திற்கு செப்.15-ல் தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து மேலூர், திருமங்கலம் உள்ளிட்ட ஒருபோக சாகுபடி நிலங்களுக்கு

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து மேலூர், திருமங்கலம் உள்ளிட்ட ஒருபோக சாகுபடி நிலங்களுக்கு செப்டம்பர் 15-இல் தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் பொதுப்பணித்துறையினரிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
மேலூர், திருமங்கலம் உள்ளிட்ட ஒருபோக சாகுபடிப் பகுதிகளுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட்  மாதம் விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது பெரியாறு-வைகை  ஆகிய இரு அணைகளிலும் சேர்த்து 6,900 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 6000 மில்லியன் கன அடிக்கு மேல் நீர் இருப்பு இருந்தால் ஒருபோக சாகுபடி விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
எனவே, ஒருபோக சாகுபடி விவசாயத்துக்கு தண்ணீர் செப்டம்பர் 15-இல் திறக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளைச் சந்தித்து மனு அளித்தனர். அப்போது,  பெரியாறு-வைகை அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 4 நாள்களாக மழை இல்லை. வைகையில் நீர் இருப்பை சற்று கூடுதலாக்கிய பின்னர் தண்ணீர் திறக்க ஆவண செய்வதாக அதிகாரிகள் கூறியதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இருப்பினும் விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் தேதியை முன்னதாக அரசு அறிவிக்க வேண்டும். அதனால், விவசாயிகள் நாற்றங்கால் தயாரிக்கும் பணிகளையும் நேரடி நெல் விதைப்பு பணிகளையும்  முன்னதாக தொடங்க வாய்ப்பு ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com