சுங்கச்சாவடி துப்பாக்கிச் சூடு: சிறையில் உள்ள  மகனுக்கு பதிலாக சட்டப்படிப்பு: கலந்தாய்வில் பங்கேற்க தந்தைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டு சிறையில் உள்ளவருக்கு பதிலாக,

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டு சிறையில் உள்ளவருக்கு பதிலாக, அவரது தந்தை சட்டப்படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
திருச்சியைச் சேர்ந்த கணேசன் தாக்கல் செய்த மனு: எனது மகன் கார்த்திகேயன் சட்டக் கல்லூரியில் சேருவதற்காக விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் தனசேகரன் என்பவருடன் சேர்ந்து, ஒரு வழக்கிற்காக திருநெல்வேலி சென்று காரில் திரும்பினார். மதுரை அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் பணம் வசூலிப்பதில் தனசேகரன் தரப்பினருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தனசேரன் உடன் வந்தவர்களில் ஒருவர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுள்ளார். இவ்வழக்கு தொடர்பாக எனது மகன் கார்த்திகேயன் நீதிமன்றத்தில் சரணடைந்து, மதுரை மத்திய சிறையில் உள்ளார். இந்நிலையில் அவருக்கு 3 ஆண்டு சட்டப்படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்கக்கோரி கடிதம் வந்துள்ளது. எனவே எனது மகன் சார்பில், என்னை உரிய ஆவணங்களுடன் சட்டப்படிப்பிற்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி எம்.சுந்தர் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. 
அப்போது நீதிபதி, விண்ணப்பதாரர் சார்பில், அவரது தந்தை சட்டப்படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com