மதுரையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உள்பட 4 பேர் கைது

மதுரையில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 4 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மதுரையில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 4 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மதுரை மேலமடை பகுதியில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மேலமடை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த செல்வம் மகன் சூர்யா(21) கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து, காவல் சார்பு-ஆய்வாளர் பூமிநாதன் அளித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிந்து சூர்யாவை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 1.550 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
குலமங்கலம் பகுதியில் போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது செல்லூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கணேசன்(55) என்பவர் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதுகுறித்து, காவல் சார்பு-ஆய்வாளர் ஞானபிரபாகரன் அளித்த புகாரின் பேரில் செல்லூர் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிந்து கணேசனை கைது செய்தனர். அவரிடமிருந்து 1.250 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பசும்பொன் நகரில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸாரை கண்டதும் சந்தேகத்திற்குரிய 4 பேர் தப்பியோடினர். இதில், பசும்பொன் நகரைச் சேர்ந்த பிச்சையம்மாள் (55), அவரது மகன் மருதுபாண்டி (30) இருவரும் பிடிபட்டனர். 
அவர்கள் இருவரும் கஞ்சா விற்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து காவல் சார்பு - ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் சோழவந்தான் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனர்.  
அவர்களிடம் இருந்து 2.200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதில், தப்பியோடிய 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com